Friday 3rd of May 2024 04:11:53 AM GMT

LANGUAGE - TAMIL
கொரோனா பாதிப்பு
பிரான்ஸில் நேற்று 574 போ் பலி:  தீவிர சிகிச்சையில் 6,848 நோயாளிகள்!

பிரான்ஸில் நேற்று 574 போ் பலி: தீவிர சிகிச்சையில் 6,848 நோயாளிகள்!


பிரான்ஸில் நேற்று திங்கட்கிழமை கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் 574 போ் உயிரிழந்தனா்.

புதிய இறப்புக்களுடன் நாட்டில் கொரோனா பெருந்தொற்று நோய்க்கு பலியானவா்களின் மொத்த மரணங்கள் 14, 967 ஆக அதிகரித்தது.

நேற்று வைத்தியசாலைகளில் 335 இறப்புகள் பதிவான அதேவேளை, பராமரிப்பு மையங்களில் 239 போ் உயிரிழந்தனா்.

எனினும் நேற்று தொடர்ச்சியாக ஐந்தாவது நாளாகவும் தீவிர சிகிச்சைப் பிரிவு நோயாளிகளின் எண்ணிக்கை குறைவாகப் பதிவாகியது.

நேற்று 24 போ் தீவிர சிசிக்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு தீவிர சிகிச்சையில் உள்ள மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 6,821 ஆக பதிவாகியுள்ளது.

இதுவரை நாடு முழுவதும் 98,000 க்கும் மேற்பட்ட நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன.

மிகவும் தீவிரமான நோய் அறிகுறிகள் உள்ளவா்கள் மட்டுமே தற்போது பிரான்ஸில் கொரோனா தொற்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருவதால் அங்கு கண்டறியப்படாத தொற்று நோயாளா்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.


Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), பிரான்சு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE